கள்ளக்குறிச்சி
புதிய தாலுகா அலுவலகம் திறப்பு
|கல்வராயன்மலையில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் ரூ.4 கோடி மதிப்பில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து கல்வராயன்மலையில் உள்ள புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தில் நடந்த விழாவிற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், துணைத்தலைவர் பாஷாபி ஜாகிர்உசேன், தாசில்தார் அசோகன், குடிமைபொருள் தாசில்தார் இந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராஜ், மின்னல் கொடிசக்திவேல், மலர் ராஜ்குமார், பார்வதிஅண்ணாமலை, செல்லதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் அர்ச்சனா லட்சுமணன், ரத்தினம், பாப்பாத்திசீனிவாசன், செல்வராஜ், குப்புசாமி, கல்யாணி கிருஷ்ணன், செல்வம், அண்ணாமலை, ஆண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.