சிவகங்கை
புதிய சோதனைச்சாவடி திறப்பு
|கீழடி விலக்கு அருகே புதிய சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.
திருப்புவனம்
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது கீழடி பகுதி. இங்குள்ள மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கீழடி விலக்கு அருகே சோதனை சாவடிக்கு நிரந்தர புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிடத்தின் பணிகள் முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் தலைமை தாங்கினார். மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் முன்னிலை வகித்தார். புதிதாக கட்டப்பட்ட நிரந்தர சோதனைச் சாவடியை டி.ஐ.ஜி. துரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும் பின்பு சோதனை சாவடியில் உள்ள கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
முன்னதாக புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை டி.ஐ.ஜி. சரவணசுந்தர் சோதனை சாவடி அருகே மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நமச்சிவாயம், காட்வின்செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், மணியன், ஆதிலிங்கம்போஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்கண்ணன், சிவப்பிரகாசம், கீழடி கிராம நிர்வாக அலுவலர் பிரபு, கீழடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.