< Back
மாநில செய்திகள்
ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் திறப்பு
தென்காசி
மாநில செய்திகள்

ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் திறப்பு

தினத்தந்தி
|
27 Jun 2023 12:30 AM IST

வாசுதேவநல்லூரில் ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து 18-வது வார்டில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கி, புதிய சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

இதில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் மோகன மாரியம்மாள், துணை தலைவர் லைலா பானு, நியமன குழு உறுப்பினர் முனீஸ், வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்கள் கார்த்திகா, நாகூர், சாகுல் அமீது, தமிழ்ச்செல்வி, மாரியம்மாள், பொறியாளர் பாண்டியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்