< Back
மாநில செய்திகள்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

தினத்தந்தி
|
19 Jan 2023 12:30 AM IST

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

சம்பா நெல் அறுவடை பருவத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் இருக்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பூஜைகள் செய்து திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒன்றியத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் செயல்பட உள்ளன. நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நேற்று முதலே விவசாயிகள் பலர் நெல் மூட்டைகளை கொண்டு வரத்தொடங்கினர். தொடர்ந்து எடை போடும் பணி தொடங்கப்பட்டது. நேற்று முதல் சம்பா அறுவடை பருவம் முடியும் வரை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்