< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
|11 Feb 2023 12:15 AM IST
வாக்கூர், பகண்டை ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்கூர், பகண்டை ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ராமச்சந்திரன், சீனுவாசன் வரவேற்றனர். விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி தலைமை தாங்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், நுகர் பொருள் வாணிபகழக மண்டல மேலாளர் யுவராஜ், பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், துணை தலைவர் பாலாஜி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், நகர செயலாளர் நைனாமுகமது, கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.