< Back
தமிழக செய்திகள்
ரெயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு: இந்திய ரெயில்வே நடவடிக்கை
தமிழக செய்திகள்

ரெயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு: இந்திய ரெயில்வே நடவடிக்கை

தினத்தந்தி
|
25 July 2023 2:18 PM IST

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை தொடர்ந்து இந்திய ரெயில்வே இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

சென்னை,

ரெயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய பயணிகள் ஐஆர் சிடிசி என்ற செயலியை பயன்படுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்தி முன் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

இணையதளம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடக்கம் நிகழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய Ask Disha என்ற செயலியை பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக, ரெயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை தொடர்ந்து இந்திய ரயில்வே இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்