< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
|16 Feb 2023 1:02 AM IST
அரியலூரில் 11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-23 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 3-ம் கட்டமாக அரியலூர் வட்டத்தில் அழகியமணவாளன், செங்கராயன்கட்டளை, மேலவரப்பன்குறிச்சி, கா.மாத்தூர், குருவாடி, கீழக்காவட்டாங்குறிச்சி, குலமாணிக்கம், இலந்தைக்கூடம் மற்றும் கீழக்கொளத்தூர், உடையார்பாளையம் வட்டத்தில் விக்கிரமங்கலம், ஆண்டிமடம் வட்டத்தில் ஓலையூர் ஆகிய 11 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வந்தன.