< Back
மாநில செய்திகள்
குடியிருப்பு பகுதியில் திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் வடிகால்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

குடியிருப்பு பகுதியில் திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் வடிகால்

தினத்தந்தி
|
21 July 2023 1:22 AM IST

குடியிருப்பு பகுதியில் திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் வடிகால்

தஞ்சை ரகுமான் நகர் குடியிருப்பு பகுதியில் திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் வடிகாலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கழிவுநீர் வடிகால்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை அருகே ரகுமான்நகரில் முல்லைத்தெரு உள்ளது. இந்த தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.கழிவுநீர் வடிகால் கான்கிரீட் போடப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வடிகாலின் ஒரு பகுதியில் உள்ள கான்கிரீட் மூடி சேதமடைந்துவிட்டது. இதனால் தற்போது வடிகால் திறந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

பொதுமக்கள் அச்சம்

இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், காலை நேரங்களில் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றன்றனர்.குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் திறந்து கிடக்கும் கழிவுநீர் வடிகாலுக்குள் குழந்தைகள் விழுந்துவிட வாய்ப்பு உள்ளது என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் வடிகாலை மூடிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்