< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு
|22 Oct 2023 12:58 AM IST
திறந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு கிணறு உள்ளது.
வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அலமேலுமங்கைபுரத்தில் மழை நீரை சேகரிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் மழைநீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியிலிருந்து மழைநீர் கிணறுகளில் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தகிணற்றில் மூடி அமைக்கப்படாததால் கிணறுகளில் குப்பைகள் போடப்பட்டு வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றை சுத்தமாக வைத்திருக்க மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.