ஊட்டி மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடக்கம்
|மலர் கண்காட்சி மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
ஊட்டி,
கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி எப்போது தொடங்கும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து வந்தனர். இதற்கிடையே, மே-17-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே10-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மே-17-ந்தேதி நடைபெறவிருந்த நிலையில், முன்னதாக மே 10-ந்தேதி தொடங்கும் என்றும், கடந்த ஆண்டு 7 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சி, இந்த வருடம் 10 நாட்கள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.