< Back
மாநில செய்திகள்
ஊட்டியில் 2-வது நாளாக நடைபெறும் மலர் கண்காட்சி: சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஈபிள் கோபுரம்
மாநில செய்திகள்

ஊட்டியில் 2-வது நாளாக நடைபெறும் மலர் கண்காட்சி: சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஈபிள் கோபுரம்

தினத்தந்தி
|
14 May 2023 4:29 PM GMT

ரோஜா கண்காட்சியை 2-வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

நீலகிரி,

கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டி ரோஜா பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது. மலைச்சரிவான பகுதி மற்றும் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 வகைகளை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று ஊட்டி ரோஜா கண்காட்சி தொடங்கியது. ரோஜா பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நட்டு வைத்த ரோஜா செடி தற்போதும் உள்ளது. அந்த ரோஜா செடிக்கு ஜெயலலிதா என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சியை 2-வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். குறிப்பாக 30 அடி உயரம் கொண்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதிரி ஈபிள் டவர், 15 ஆயிரம் ரோஜாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட செல்ஃபி பாயிண்ட், வண்ண வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட பல உருவங்கள் ஆகியவை சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருகின்றன.

மேலும் செய்திகள்