< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஊட்டி-குன்னூர் மலை ரெயில் பழுதால் சுற்றுலா பயணிகள் நடுக்காட்டில் தவிப்பு
|25 Oct 2022 5:39 PM IST
இன்ஜினில் பழுது ஏற்பட்டதால் குன்னூர் மலை ரெயில் 4 மணிநேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.
ஊட்டி:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரெயில் என்ஜின்களும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் மூலம் இயங்கும் என்ஜின்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 200 சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரெயில் சென்றது. அப்போது குன்னூர் ஆடர்லி அருகே இன்ஜினில் பழுது ஏற்பட்டதால் ரெயில் நிறுத்தபட்டது.
அதனை தொடர்ந்து ரெயில்வே பணிமனை பணியாளர்கள் வந்து பழுது நீக்கினர். சுமார் 4 மணி நேரம் கழித்து ரெயிலில் பழுது நீக்கப்பட்டது. இதனால் குன்னுருக்கு காலை 10.15 வர வேண்டிய மலை ரயில் பிற்பகல் 2.15 குன்னூர் வந்தடைந்தது.