தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்வு - பால்வள துறை அமைச்சர் விளக்கம்
|தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது என பால்வள துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்து உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் வணிக ரீதியான ஆவின் பால் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது. மக்கள் பயன்படுத்தும் பாலின் விலை உயர்த்தப்படவில்லை என்று பால்வள துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார்.
இதுபற்றி சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, அகில இந்திய அளவில் தமிழகத்திலேயே பால் விலை குறைவு. அதுவும் ஆவின் பாலின் விலை மிக குறைவு.
இதுவே, தனியார் பாலாக இருந்தாலும் அல்லது பிற மாநிலங்களில் உள்ள, குறிப்பிடும்படியாக குஜராத்தின் பிரசித்தி பெற்ற அமுல் போன்ற பிற பால் நிறுவனங்களின் பாலின் விலையை பற்றி பா.ஜ.க.வினர் பேச வேண்டும்.
அவற்றின் விலையை விட ஆவின் பால் விலை தமிழகத்தில் குறைவு என கூறியுள்ளார். ஆவினில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.