< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காவிரி விவகாரத்தில் முழுமையான தீர்வு காண மத்திய அரசால்தான் முடியும்: அமைச்சர் ரகுபதி
|9 Oct 2023 6:28 PM IST
காவிரி விவகாரத்தில் முழுமையான தீர்வு காண மத்திய அரசால்தான் முடியும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சென்னை,
அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி விவகாரத்தில் முழுமையான தீர்வு காண மத்திய அரசால்தான் முடியும். பாஜக கூட்டணியில் இருந்த போது காவிரி தொடர்பான நிபந்தனையை அதிமுக ஏன் வைக்கவில்லை? காவிரி நீர் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகம் நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்கள் நேரடியாக மோதிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஆணையம், குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை" என்றார்.