< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தான் பெட்ரோல் குண்டுகளை வச்சி விளையாடுறார்கள்.." சபாநாயகர் அப்பாவு அதிரடி பேச்சு
|26 Oct 2023 6:09 PM IST
ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தான் பெட்ரோல் குண்டுகளை வச்சி விளையாடுறார்கள் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லை,
நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
"கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு குறிப்பிட்ட இயக்கம், ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தான் பெட்ரோல் குண்டுகளை வச்சி விளையாடுகிறார்கள்.
வன்முறையை தூண்டவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் அவர்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டத்தின் முன் நிறுத்துவார். அவர்களுக்கு தண்டனையை வாங்கி கொடுப்பார்." இவ்வாறு அவர் கூறினார்.