< Back
மாநில செய்திகள்
53 சதவீதம் பேர் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினர்
மதுரை
மாநில செய்திகள்

53 சதவீதம் பேர் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினர்

தினத்தந்தி
|
29 May 2023 2:11 AM IST

மதுரை மாவட்டத்தில் 53 சதவீதம் பேர் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினர்.

மதுரை,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 6,882 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களுக்காக மொத்தம் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு காலை மற்றும் மதியம் என 2 பிரிவுகளாக நடந்தது. வக்பு கல்லூரி மையத்தில் நடந்த தேர்வை கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார். மொத்தம் விண்ணப்பம் செய்த 6,882 பேரில் 3 ஆயிரத்து 652 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இது 53 சதவீதம் ஆகும். 3 ஆயிரத்து 230 பேர் தேர்வு எழுதவில்லை.

Related Tags :
மேலும் செய்திகள்