< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும்
|20 Jun 2023 12:31 AM IST
ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகரில் மருந்து வணிகர்கள் சங்கம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநிலத்தலைவர் வேங்கட சுந்தரம் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் இளங்கோ, ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தடை செய்யப்பட்ட 14 வகையான மருந்துகளை மருந்து கடைகளில் விற்பதில்லை என்றும் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.