< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் ரம்மி தடை சட்டம்- இன்றே அரசிதழில் வெளியிடப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்- இன்றே அரசிதழில் வெளியிடப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி

தினத்தந்தி
|
10 April 2023 9:34 PM IST

ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது அரசிதழில் இன்றே வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது அரசிதழில் இன்றே வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவின்படி, ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித் தீர்மானத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டம் குறித்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் மாண்புமிகு ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இதனால் தமிழ்நாட்டின் நிருவாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம். தனி தீர்மானத்தின் நல்விளைவாக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டமானது தமிழ்நாடு அரசிதழில் இன்றே வெளியிடப்படும். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்றே அமலுக்கு வரும்" எனக் கூறினார்.

மேலும் செய்திகள்