< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் - அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் - அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

தினத்தந்தி
|
25 Nov 2022 2:04 PM IST

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதா குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதலிளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் குறித்த அறிக்கைக்குப் பிறகே சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டே கொண்டு வரப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை பரிசீலிப்பதாக கவர்னர் கூறியுள்ளார். இருப்பினும், தடை மசோதாவிற்கு கவரனர் தாமதமின்றி ஒப்புதல் தர வேண்டும்.

அவசர சட்டத்தில் உள்ள அம்சங்கள்தான், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் உள்ளன. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்