< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் - பணிகளை தீவிரப்படுத்தியது காவல்துறை
|11 April 2023 3:37 PM IST
ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களை கண்டறியவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கியுள்ளது;
சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் மூலம், சட்ட விதிகளின் படி தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது;
காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இது குறித்து ஒரிரு நாட்களில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களை கண்டறியவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.