< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இணையவழி சூதாட்டம், விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துகிறது: முருகானந்தம் பேச்சு
|11 Sept 2024 12:04 PM IST
கொரோனா காலகட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் அதிகமாக பரவியது என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் கூறினார்.
சென்னை,
சென்னை சாந்தோமில் நகராட்சி நிர்வாக இயக்குநரக கூட்ட அரங்கில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் 'இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள்'குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேசியதாவது:-
இணையவழி சூதாட்டம், இணையவழி விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கொரோனா காலகட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் பரவியது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் இதனை ஒழுங்குபடுத்தி வருகிறது. திமுக அரசு இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடுக்க சட்டம் இயற்றியது. இது தொடர்பாக பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.