< Back
மாநில செய்திகள்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீது இணையவழி ஆபாச தாக்குதல் - கனிமொழி எம்.பி. கண்டனம்
மாநில செய்திகள்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மீது இணையவழி ஆபாச தாக்குதல் - கனிமொழி எம்.பி. கண்டனம்

தினத்தந்தி
|
27 Aug 2024 7:45 PM IST

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான இணையவழி ஆபாச தாக்குதல் கண்டிக்கத்தது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரசாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழிச்செயல்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்