< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது
மாநில செய்திகள்

'நீட்' தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது

தினத்தந்தி
|
11 Feb 2024 5:25 AM IST

‘நீட்’ தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கி இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு வாயிலாகவே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.

அதன்படி 2024-25-ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கி இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

விண்ணப்ப பதிவு மேற்கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அந்த வகையில் 'நீட்' தேர்வுக்கான கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.1,700-ம், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1,600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

தேர்வை பொறுத்தவரையில் மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வு முடிவு ஜூன் 14-ந் தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்