< Back
மாநில செய்திகள்
சின்னவெங்காயம் விலை மீண்டும் உயருகிறது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சின்னவெங்காயம் விலை மீண்டும் உயருகிறது

தினத்தந்தி
|
23 Sept 2023 2:49 AM IST

தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது. கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனையானது.

தஞ்சாவூர்;

தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது. கிலோ ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனையானது.

சின்ன வெங்காயம்

சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. தமிழர்களின் அன்றாட சமையலில் மிகவும் வழக்கமாக பயன்படுத்தப்படும் மூலிகை பொருளாக வெங்காயம் விளங்குகிறது. இந்த வெங்காயத்தில் சின்னவெங்காயம், பல்லாரி என்ற பெரியவெங்காயம் என இரு வகைகள் உள்ளன. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த மாதத்தில் உயர்ந்து இருந்தது. பின்னர் படிப்படியாக சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து வந்தது. தற்போது சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

விலை உயருகிறது

இந்த மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை உயர தொடங்கி இருக்கிறது. அதாவது தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. பல்லாரி கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனையானது.தஞ்சை மார்க்கெட்டிற்கு அரியலூர், பெரம்பலூர், பொள்ளாச்சி, திருப்பூர், மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து சின்னவெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது சின்னவெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் விலை உயர தொடங்கி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல் எலுமிச்சை பழம் விலையும் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது. தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60 முதல் ரூ.70 வரையும், குடை மிளகாய் ரூ.60-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும், பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.50 வரையும், பாகற்காய் ரூ.40-க்கும், கேரட் ரூ.40-க்கும், கத்திரிக்காய் ரூ.35-க்கும், சவ்சவ் ரூ.20-க்கும், முருங்கைக்காய் ரூ.15-க்கும் விற்பனையானத

மேலும் செய்திகள்