< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
உப்பிலியபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் நடவு பணிகள் தொடங்கியது
|17 Dec 2022 12:49 AM IST
உப்பிலியபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் நடவு பணிகள் தொடங்கியது
உப்பிலியபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சோபனபுரம், ஓசரப்பள்ளி, கொப்பம்பட்டி, கொப்பமாபுரி, நாகநல்லூர், வெள்ளாளப்பட்டி, முருங்கப்பட்டி, மங்கப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை மாத சம்பா பருவ சின்ன வெங்காய நடவு பணிகள் தொடங்கி உள்ளன. தொடர் மழையால் பருவ நடவுகள் தாமதப்பட்டிருப்பதாகவும், இப்பருவத்தில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் நடவு பணிகள் செய்யப்பட உள்ளதாகவும் உப்பிலியபுரம் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.