< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பாளையங்கோட்டை உழவர் சந்தையில் வெங்காயம்-மிளகாய் விலை உயர்வு
|14 Oct 2022 12:47 AM IST
பாளையங்கோட்டை உழவர் சந்தையில் வெங்காயம்-மிளகாய் விலை உயர்ந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மேலடுக்கு மற்றும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் மற்றும் அறுவடை பாதிப்பால் வரத்து குறைந்து உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள உழவர் சந்தையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ரூ.56-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் நேற்று முன்தினம் ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மேலும் விலை உயர்ந்து ரூ.76-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.30-க்கு விற்பனையான பச்சை மிளகாய் நேற்று ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.