ஈரோடு
மாவட்டத்தில் நடந்து வரும்பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்
|ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையாளருமான ஜி.பிரகாஷ் தலைமையில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் பேசும்போது, 'தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்' என்று கூறினார்.
இ-சேவை மையம்
முன்னதாக அவர் ஊரக வளர்ச்சி மற்றும் சமத்துவபுர குடியிருப்புகள், நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத், தூய்மைபாரத இயக்கம், பாதாள சாக்கடை, இ-சேவை மையம், பள்ளிக்கூட கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், மக்களைத்தேடி மருத்துவம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், நிலுவையில் உள்ள பட்டாக்கள், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.