< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
|11 Oct 2023 9:26 PM IST
மதுரை அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை,
மதுரை அருகே வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் ஒரு வயது குழந்தை சஞ்சீவ். கடந்த ஒரு வாரமாக, குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. எனினும், காய்ச்சல் குறையாத நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்லப்பாண்டி அளித்த புகாரின் பேரில், அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தை காய்ச்சலால் இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.