< Back
மாநில செய்திகள்
ஓராண்டு சாதனை மலர் வெளியீடு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ஓராண்டு சாதனை மலர் வெளியீடு

தினத்தந்தி
|
4 Jun 2022 11:22 PM IST

ஓராண்டு சாதனை மலரை அமைச்சர் காந்தி வெளியிட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு-கடைக்கோடித் தமிழரின் கனவுகளை தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் திராவிட மாடல் வளர்ச்சி. திசையெட்டும் மகிழ்ச்சி என்ற ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

சாதனை மலரை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் நானில தாசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்