திருவள்ளூர்
ஒருதலை காதல் விவகாரம்: இளம் பெண்ணை காரில் கடத்த முயன்ற 2 பேர் கைது
|இளம் பெண்ணை காரில் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலச காலனியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 24) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த பெண் தனது தாயாருடன் பள்ளிப்பட்டில் உள்ள நகைக்கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது முனுசாமி நாயுடு கண்டிகை என்ற இடத்தில் ஜெயக்குமார் தனது நண்பரான அத்திமாஞ்சேரி மேல் காலனியை சேர்ந்த விஜய் (27) என்பவருடன் சேர்ந்து காரில் அந்த பெண்ணை கடத்த முயன்றனர். இதையடுத்து அந்த பெண் கூற்றலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு ஜெயக்குமாரையும், அவரது நண்பர் விஜயையும் பள்ளிப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜு வழக்கு பதிவு செய்து ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருத்தணி சிறையில் அடைத்தார்.