< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் காலத்தின் கட்டாயம் - எல்.முருகன்
மாநில செய்திகள்

'ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் காலத்தின் கட்டாயம்' - எல்.முருகன்

தினத்தந்தி
|
21 Sept 2024 9:55 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் காலத்தின் கட்டாயம் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

மத்திய மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்த்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது கல்வியாளர்கள், நீதிபதிகள், துணைவேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்