< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் - ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
மாநில செய்திகள்

'ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம்' - ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

தினத்தந்தி
|
3 Sept 2023 12:56 AM IST

ஜனநாயகம் தளைத்தோங்க ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஈரோடு,

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம் என்று ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"ஜனநாயகம் தளைத்தோங்க வேண்டும் என்றால், ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அப்போது தான் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தடைகளை நீக்க முடியும்.

மத்திய அரசு தேர்தல் முதல் பஞ்சாயத்து தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடந்து முடிந்து விட வேண்டும். அடிக்கடி குழந்தை பெறுவது தாயின் உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்பது போல், அடிக்கடி தேர்தல் வந்தால் நாட்டிற்கு நல்லது அல்ல."

இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்