< Back
மாநில செய்திகள்
ஒரேநாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்பு: எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்
மாநில செய்திகள்

ஒரேநாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்பு: எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்ட ஆணையம் கடிதம்

தினத்தந்தி
|
28 Dec 2022 8:11 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் சட்ட ஆணையம் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.

சென்னை,

ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.

ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்டத்துறை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. கடிதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்