< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் கைது
|13 Aug 2023 5:28 AM IST
நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் சின்னத்துரை (வயது 17). பிளஸ்-2 மாணவர். சம்பவத்தன்று இரவில் இவரது வீட்டுக்குள் புகுந்த சக மாணவர்கள் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் சின்னத்துரையை வெட்டியது. இதனை தடுக்க முயன்ற மாணவரின் தங்கை சந்திரா செல்விக்கும் (14) அரிவாள் வெட்டு விழுந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் உள்பட 6 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 18 வயதான வாலிபர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.