< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முல்லை பெரியாறு அணையில் இருந்து மேலும் ஒரு சுரங்கப்பாதை- அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
|7 Sept 2022 9:44 PM IST
மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்தார்
மதுரை,
மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அவர்களின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.அப்போது அரசு தரப்பில், சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதால் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.