< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
ஆசிரியை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
|14 July 2022 10:50 PM IST
நாட்டறம்பள்ளி அருகே ஆசிரியை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் டேக்கன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 40).
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முருகம்மாள் குரும்பேரி ஊராட்சி ஓன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து திருப்பத்தூர் அருகே கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் தனியாக இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட தகராறில் முருகம்மாளை அவருடைய மாமனார் மணி வெட்டி கொலை செய்தார்.
பின்னர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இன்த நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ராஜாமணி என்பரை நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் இன்று கைது செய்துள்ளார்.