< Back
மாநில செய்திகள்
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
மாநில செய்திகள்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

தினத்தந்தி
|
1 Aug 2023 10:26 PM IST

கோவை கார் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கோவை,

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

அதன்பின், இந்த வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதுவரை இந்த வழக்கில் 11 பேர் வரை கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இப்ரீஸ் என்பவரை இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதுசெய்தனர். தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து செல்லப்பட்டார். கோவை கார் வெடிப்பு வழக்கில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்