< Back
மாநில செய்திகள்
போலி சான்றிதழ் மூலம் அடையாள அட்டை வழங்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
வேலூர்
மாநில செய்திகள்

போலி சான்றிதழ் மூலம் அடையாள அட்டை வழங்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

தினத்தந்தி
|
14 July 2022 4:42 PM GMT

போலி சான்றிதழ் மூலம் அடையாள அட்டை வழங்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்கள் போலி மருத்துவ சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். அவர்கள் மீதும், போலி மருத்துவ சான்றிதழ் வாங்கி கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக போலி சான்றிதழ் மூலம் தேசிய அடையாள அட்டை பெற்ற குடியாத்தம் தாலுகா லட்சுமணாபுரத்தை சேர்ந்த நவநீதம் என்ற பெண்ணையும், போலி சான்றிதழ் மூலம் பலருக்கு அடையாள அடடை வாங்கி கொடுத்த வேலப்பாடியை சேர்ந்த தினகரன் ஆகியோரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் போலி சான்றிதழ் மூலம் சிறுவனுக்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்று கொடுத்ததாக காட்பாடி கழிஞ்சூர் இ.பி.காலனியை சேர்ந்த பாஸ்கர் என்கிற ஆவின் பாஸ்கரை (வயது 46) மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து (பொறுப்பு) தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் இதில், தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்