< Back
மாநில செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
மாநில செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

தினத்தந்தி
|
23 Aug 2024 8:36 AM IST

கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவரை தனிப்படை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. கொலை சம்பவம் தொடர்பாக 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் தனிப்படை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்