< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மகா விஷ்ணு மீது மேலும் ஒரு புகார்
|11 Sept 2024 6:56 AM IST
மகா விஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு கடந்த வாரம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.
அவருடைய பேச்சு சமூகவலைதளங்களில் வெளியாகிய நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மகா விஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் பிரிவு 92-ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என டிசம்பர் 3 இயக்கம் சார்பில், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.