< Back
தமிழக செய்திகள்

திருநெல்வேலி
தமிழக செய்திகள்
தொழிலாளி கொலையில்மேலும் ஒருவர் கைது

21 Jan 2023 1:51 AM IST
நெல்லை அருகே தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சீவலப்பேரி:
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி யாதவர் தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவருடைய மகன் மாயாண்டி (வயது 38). தொழிலாளி. இவர் கடந்த நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வலதி, தம்பான் என 18 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சீவலப்பேரியை சேர்ந்த லட்சுமணன் (48) என்பவரை நேற்று கைது இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் செய்தனர். இதுவரை மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.