< Back
தமிழக செய்திகள்

சென்னை
தமிழக செய்திகள்
`விநாயகர் சதுர்த்திக்கு' சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக இன்று 6 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கம்

15 Sept 2023 10:30 AM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து முன்கூட்டியே சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஒருநாள் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, இரவு நேரத்தில் புறப்படும் கடைசி ரெயில் சேவை 10 மணியாக மாற்றப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில் அதாவது இரவு 8-10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் 9 நிமிடம் என்பதற்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.