< Back
மாநில செய்திகள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சம் பேர் பயணம்
மாநில செய்திகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சம் பேர் பயணம்

தினத்தந்தி
|
2 Oct 2022 10:52 PM IST

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை,

காந்தி ஜெயந்தி , சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற தொடர் அரசு விடுமுறையை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி மற்றும் நேற்று ஆகிய 2 நாட்களில் சென்னையில் இருந்து 1,920 ஆம்னி பஸ்களில் 69 ஆயிரத்து 120 பயணிகள் பயணித்துள்ளனர். இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 1,030 ஆம்னி பஸ்களில் 37 ஆயிரத்து 80 பயணிகளும் பயணித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 2 நாட்களில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 200 பயணிகள் ஆம்னி பஸ்களில் தமிழக முழுவதும் பயணம் செய்துள்ளனர் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்