< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
ஒரு லட்சத்து 26 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை
|29 Oct 2022 4:07 AM IST
நெல்லை அரசு பொருட்காட்சிக்கு 36 நாட்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்தனர்
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பெயரில் நெல்லை டவுன் பகுதியில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டது. கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த அரசு பொருட்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சிக்கு 36 நாட்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 912 பார்வையாளர்கள் வந்து தமிழக அரசின் நலத்திட்டங்களை பார்த்து சென்றுள்ளனர். மேலும் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசு பொருட்காட்சிக்கு வந்து தமிழ்நாடு அரசின் நல திட்டத்தை பார்வையிடலாம்.
இந்த தகவலை, மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.