< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருப்போரூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு - 10-க்கும் மேற்பட்டோர் காயம்
|17 Jun 2024 7:25 AM IST
திருப்போரூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்லாபுரம் மற்றும் அனுபுரம் பகுதியிலிருந்து குன்றத்தூருக்கு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 20 பேர் வேனில் சென்றுள்ளனர். இந்த நிலையில் சுபநிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பும்போது, திருப்போரூர் அடுத்த தண்டலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென வேனின் பின் டயர் வெடித்தது. இதையடுத்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள திருப்போரூர் மற்றும் பூஞ்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.