< Back
மாநில செய்திகள்
மினி லாரி மோதி ஒருவர் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

மினி லாரி மோதி ஒருவர் பலி

தினத்தந்தி
|
18 July 2022 10:39 PM IST

விழுப்புரம் அருகே மினி லாரி மோதி ஒருவர் பலி

செஞ்சி

விழுப்புரம் அருகே உள்ள கோழிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 44). இவர் சம்பவத்தன்று மாலை அதே ஊரை சேர்ந்த தனது நண்பர் முருகன்(46) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக அரியலூர் திருக்கை கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த சங்கர், முருகன் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். முருகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்