நாமக்கல்
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
|நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
திருச்சி மாவட்டம் தொட்டியம் கோடியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் அசோக்குமார் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் நாமக்கல்லில் உள்ள திருச்செங்கோடு சாலையில் பிள்ளையார் கோவில் அருகில் அப்புசாமி என்பவர் புதிதாக கட்டிவரும் கட்டிடத்தில் மரக்கட்டையால் கட்டப்பட்டு இருந்த சாரத்தை அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது மரக்கட்டை ஒன்று அருகில் சென்ற மின்சார கம்பியில் பட்டதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அசோக்குமாரின் தாயார் லட்சுமி நாமக்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.