< Back
மாநில செய்திகள்
பேரிகை அருகே  மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; விவசாயி பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பேரிகை அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; விவசாயி பலி

தினத்தந்தி
|
28 May 2022 10:34 PM IST

பேரிகை அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; விவசாயி பலி

ஓசூர்:

சூளகிரி அருகே உள்ள தோரிப்பள்ளியை சேர்ந்தவர் சந்துரு என்கிற சந்திரப்பா (வயது 54). விவசாயி. சம்பவத்தன்று இவர் ஆனந்தகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பேரிகை- சூளகிரி சாலையில் சென்றார். மோட்டார்சைக்கிளை ஆனந்தகுமார் ஓட்டி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டர் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆனந்தகுமார் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்