< Back
மாநில செய்திகள்
லாரி மோதி ஒருவர் பலி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

லாரி மோதி ஒருவர் பலி

தினத்தந்தி
|
12 Sept 2023 11:30 PM IST

ஆலங்காயம் அருகே லாரி மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் இருந்து நிம்மியம்பட்டு கிராமத்திற்கு இன்று மாலை மோட்டார் சைக்கிளில் கேசவன் (வயது 43) என்பவரும், அவருடன் அவரது உறவினர் கணபதி (36) என்பவரும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் நோக்கி சென்று டிப்பர் லாரி திடீரென சுண்ணாம்புபள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கேசவன் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

காயம் அடைந்த கணபதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்,

இது தொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்வராஜ் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்