< Back
மாநில செய்திகள்
ஹெல்மெட் அணியாவிட்டால் ஒருநாள் முழுவதும் பயிற்சி வகுப்பு - கோவை மாவட்ட போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
மாநில செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் ஒருநாள் முழுவதும் பயிற்சி வகுப்பு - கோவை மாவட்ட போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

தினத்தந்தி
|
25 Jan 2023 10:46 PM IST

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோவை மாவட்ட போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.


கோவை,

கோவையில் வரும் 27-ந்தேதி முதல் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹெல்மெட் அணியாத நபர்களுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து அன்றைய தினம் முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்